வெளிநாட்டில் வாழ்ந்துகொண்டு சொந்த நாட்டைக்குறித்து அவதூறு பரப்பிய இரண்டு பெண்கள் கைது!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் வாழும் துருக்கி வம்சாவளியினரான இரண்டு பெண்கள் சமூக ஊடகங்களில் தங்கள் நாட்டு தலைமை குறித்து அவதூறு பரப்பியதாக சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சமூக ஊடகங்களில் தங்கள் நாட்டு தலைமை மற்றும் கொள்கைகள் குறித்து அவதூறு பரப்பும் துருக்கி நாட்டவர்களின் பாஸ்போர்ட்டுகள், ஐரோப்பா முழுவதிலும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக சுவிட்சர்லாந்தில் வாழும் துருக்கி குடிமக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தங்கள் பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்படுவதால், அவர்கள் எந்த நாட்டுக்கும் பயணம் செய்ய முடியாது.

பேசலில் வசிக்கும் ஒரு 33 வயது பெண், சூரிச்சிலுள்ள தூதரகத்திற்கு வழக்கம்போல் ஆவணங்களை ஆய்வுக்காக கொடுத்தபோது, அவை அவருக்கு திரும்ப கொடுக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் துருக்கியில் கிரிமினல் குற்றங்களுக்காக தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரது பாஸ்போர்ட் முதலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் குர்திஷ் பாரம்பரியம் கொண்டவர் என்றாலும் சுவிட்சர்லாந்தில் பிறந்தவராவார்.

அதேபோல் பெர்னில் வசிக்கும் 26 வயது பெண் ஒருவரின் பாஸ்போர்ட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

துருக்கி அதிகாரிகள் தங்கள் குடிமக்களின் சமூக ஊடக கணக்குகளை கண்காணித்து வருகிறார்கள்.

வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் குடிமக்கள், தங்கள் சொந்த நாட்டின் தலைமை மற்றும் கொள்கைகள் குறித்து அவதூறான செய்திகளை சமூக ஊடகங்களில் வெளியிடுகிறார்களா என்பதை அவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.

இதற்கிடையில் பிரச்னையில் சிக்கியுள்ள தங்களுக்கு சுவிட்சர்லாந்து எந்த உதவியும் செய்யவில்லை என அந்த இரண்டு பெண்களுமே குற்றம் சாட்டியுள்ளார்கள். சுவிஸ் வெளியுறவு அமைச்சகம், இந்த பிரச்னைக்கு பாஸ்போர்ட்களை வழங்கிய நாடுகள்தான் பொறுப்பு என்று கூறிவிட்டது.

இது தொடர்பாக கருத்து தெரிவிக்க துருக்கி அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்