சுவிஸில் சொந்த குடியிருப்பு அருகே மர்ம நபர்களால் படுகொலை: சாம்பல் நிற வாகனத்தை தேடும் பொலிசார்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தில் சொந்த குடியிருப்பு அருகே மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட நபர் தொடர்பில் சாம்பல் நிற வாகனம் ஒன்றை தற்போது பொலிசார் தேடி வருகின்றனர்.

ஆர்காவ் மண்டலத்தின் Killwangen பகுதியில் கடந்த மே மாதம் 5 ஆம் திகதி 57 வயது நபர் வாள்வெட்டு காயங்களுடன் குற்றுயிராக மீட்கப்பட்டார்.

தொடர்ந்து மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் மரணமடைந்தார்.

அவர் தாக்கப்படுவதற்கு முந்தைய நாள் Schlieren பகுதியில் விருந்து ஒன்றில் அவர் கலந்து கொண்டதாக இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இது விசாரணை அதிகாரிகளுக்கு புதிய திருப்பத்தை தந்தாலும், அந்த நபரை தாக்கியவர்கள் தொடர்பில் எந்த துப்பும் துலங்காமல் உள்ளது.

இதுவரை இந்த கொலை தொடர்பில் சுமார் 100 சந்தேக நபர்களை பொலிசார் விசாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இந்த படுகொலைக்கு பின்னர் மர்ம நபர்கள் தப்பியதாக கூறும் சாம்பல் நிற Audi கார் ஒன்றை பொலிசார் தேடி வருகின்றனர்.

கொல்லப்பட்ட நபர் Schlieren பகுதியில் நடந்த விருந்து ஒன்றில் கலந்து கொண்ட போதும் அந்த கார் அப்பகுதியில் காணப்பட்டதாகவும்,

தாக்குதல் நடத்தப்பட்டபோதும் அந்த கார் சம்பவப்பகுதியில் காணப்பட்டதாகவும் பொலிசாருக்கு உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த சாம்பல் நிற கார் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள், பொலிசாரை அணுகவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்