நியூசிலாந்து தீவிரவாத தாக்குதல் குறித்து ஆய்வு செய்த சுவிஸ் இளைஞர்: வெடிகுண்டு தயாரிக்கும் தரவுகளுடன் கைது

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் வெடிகுண்டு தயாரிக்கும் தரவுகளுடன் கைதான இளைஞரை மேலும் ஒரு மாத காலம் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் உளவு அமைப்புகளால் அளிக்கப்பட்ட அறிக்கையை தொடர்ந்து ஜெனீவா மண்டலத்தில் குடியிருப்பு ஒன்றில் பொலிசார் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சோதனை நடவடிக்கையில் துப்பாக்கி, கத்தி, வாள், 2 மொபைல்கள் மற்றும் கணினி உள்ளிட்ட பொருட்களுடன் 17 வயது நபர் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்துள்ள பொலிசார், சோதனையின்போது அந்த இளைஞரின் கணினியில் வெடிகுண்டு தயாரிக்கும் தரவுகள் கைப்பற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது இந்த வழக்கில் குறித்த இளைஞரை ஒரு மாத காலம் காவலில் எடுத்து விசாரிக்க பெடரல் நீதிமன்றம் உத்தவு பிறப்பித்துள்ளது.

பெடரல் நீதிமன்றம் அளித்த உத்தரவில், குறித்த இளைஞர் நியூசிலாந்து தீவிரவாத தாக்குதல் தொடர்பில் இணையத்தில் தரவுகளை ஆய்வு செய்துள்ளதையும், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் பதிவு செய்துள்ளது.

ஆனால் தாம் மத அடிப்படைவாதி அல்ல எனவும் எந்த தீவிரவாத அமைப்புடனும் தமக்கு தொடர்பு இல்லை எனவும் அந்த இளைஞர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

தமக்கு ஒரு மத போதகரின் நட்பு இருப்பதாகவும் அவருடன் ஆயுதங்கள் தொடர்பில் விவாதித்துள்ளதாகவும், குடியிருப்பில் எவரும் இல்லாத போது கணினியை பயன்படுத்தியுள்ளதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு அடுத்தகட்ட விசாரணைக்கு பின்னர் வெளியிடப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்