வீட்டுக்குள் நுழைந்த திருடனை சிறை வைத்த விவசாயிக்கு சிறை!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில், தனது வயலில் பயிர் செய்திருந்த கஞ்சா செடிகளை அறுவடை செய்ய முயன்று கொண்டிருந்த ஒரு விவசாயியை சூழ்ந்து கொண்டனர் ஒரு கூட்டம் ஆயுதம் ஏந்திய திருடர்கள்.

பெர்னைச் சேர்ந்த அந்த விவசாயி, முந்தின இரவே தனது வீட்டை சிலர் நோட்டம் விடுவதை கவனித்திருந்திருக்கிறார்.

எனவே தயாராகவே இருந்த அவர் திருடர்களைப் பிடிக்க முயல, ஒருவர் சிக்க, மற்றவர்கள் தப்பியோடிவிட்டனர்.

சிக்கிய திருடனை தனது மதுபானம் சேமித்து வைக்கும் அறையில் சிறை வைத்தார் அந்த விவசாயி.

திருடனைப் பிடித்ததற்காக தனக்கு பாராட்டு கிடைக்கும் என்று பார்த்தால், நீதிமன்றம் ஒன்று அவரையே சிறையிலடைக்க உத்தரவிட்டுள்ளது.

சட்டத்தை கையில் எடுத்து ஒருவரை இரண்டு மணி நேரம் அடைத்து வைத்திருந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய நீதிபதி, விவசாயிக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்ததோடு, பாதிக்கப்பட்ட திருடனுக்கு 5,000 சுவிஸ் ஃப்ராங்குகள் இழப்பீடும் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

அவர்கள் தன்னையும் தாக்கினார்கள், முகத்தில் பெப்பர் ஸ்பிரே தெளித்தார்களே அதற்கு என்ன செய்ய என்று கேட்டால், அதற்கென்ன, அவர்களுக்கும் தண்டனை கொடுத்துவிட்டால் போகிறது என்று கூறிவிட்டார் நீதிபதி!

தொடர்ந்து, விவசாயியால் சிறைபிடிக்கப்பட்டவர் உட்பட, அனைவர் மீதும் தனியாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்