வாயில்லா ஜீவன்களிடம் சுவிஸ் பெண்மணியின் கொடூர செயல்: வெளிச்சத்துக்கு வந்த பகீர் பின்னணி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் குடியிருப்பு ஒன்றில் விஷம் அருந்தி குற்றுயிரான நிலையில் மீட்கப்பட்ட மூன்று நாய்கள் தொடர்பில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.

குறித்த நாய்களை அதன் உரிமையாளர் பெண்மணியே விஷம் அருந்த வைத்து கொல்லப்பார்த்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி, அந்த நாய்கள் மூன்றுக்கும் சிகிச்சை அளிப்பது தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட 5,000 பிராங்குகள் தொகையை குறித்த பெண்மணி ஏமாற்றியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ள குறித்த பெண்மணி, யார் இந்த கொடுஞ்செயலை செய்தார்கள் என தமக்கு தெரியாது என உறுதிபட தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், அந்த நாய்களின் உரிமையாளரே விஷம் வைத்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த இச்சம்பவத்தில், அந்த நாய்கள் மூன்றின் குடலில் இருந்து ரேஸர் கத்திகள் மற்றும் விஷம் இருந்துள்ளதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

பூந்தோட்டத்துடன் குடியிருப்பு அமைந்தால் பொதுமக்கல் எவரும் விஷம் கொஞ்சம் சேமித்து வைத்திருப்பார்கள் என அப்போது அந்த பெண்மணி உள்ளூர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில் போதிய ஆதாரங்கள் ஏதும் அபோது சிக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்