குளியலறையில் பிணமாக கிடந்த பிரித்தானியா கோடீஸ்வரி.. மர்மமத்தில் புதிய திருப்பம்

Report Print Basu in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து ஹோட்டல் குளியலறையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்த பிரித்தானியா கோடீஸ்வரரரின் மகள் வழக்கில் ஜேர்மனியை சேர்ந்த காதலன் பொலிசிடம் சிக்கியுள்ளான்.

North Yorkshire-ச் சேர்ந்த 22 வயதான Anna Florence Reed, ஏப்ரல் மாதம் சுவிட்சர்லாந்தின் Locarno உள்ள நட்சத்திர ஹோட்டலின் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

Anna மரணம் தொடர்பில் 29 வயதான பவுன்சர் காதலன், Dirk W என்றழைக்கப்படும் நபர் மீது படுகொலை மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக Tessin-ல் உள்ள அரசு வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜேர்மனியை சேர்ந்த Dirk W-வை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது எனவும் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தன்று ஹோட்டலில் இருந்து வெளியேறிய Dirk W, தனது காதலிக்கு உடல்நிலை சரியில்லை என கூறிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் Anna-வின் உயிரற்ற உடலை குளியலறையில் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

பிரேத பரிசோதனையில் இளம் பெண் கழுத்து நெரித்து கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. Dirk W-யிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், இருவரும் விளையாடிக் கொண்டிருந்த போது தற்செயலாக Anna-வின் கழுத்தை துண்டால் இறுக்கியதாக தெரிவித்துள்ளார்.

(Image: CEN)

சம்பவம் நடந்து ஐந்து மாதங்களுக்கு பின்னர், Anna-வின் கிரெடிட் கார்டு ஹோட்டலின் லிப்டில் கண்டெடுக்கப்பட்டது. தான் தன் கார்டை லிப்டில் விட்டு வந்ததாக Dirk W ஒப்புக்கொண்டுள்ளார்.

கோடீஸ்வரி Anna-விடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்க Dirk W இவ்வாறு செய்தாரா என்ற கோணத்தில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, ஆனால் முடிவு இன்னும் அமைச்சகத்திடம் அளிக்கப்படாத நிலையில், வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்