சுவிட்சர்லாந்தில் மகள் வயது பிரித்தானிய பெண்ணை சீரழித்த நபர்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

பிரித்தானியரான பதின்ம வயது பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக 55 வயது நபர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிரபல சுவிஸ் ரிசார்ட் ஒன்றில் இந்த மோசமான சம்பவம் நடைபெற்றுள்ளது. மதுபான விடுதியில் மது பரிமாறுபவராக பணிபுரியும் அந்த நபர், அந்த 14 வயது பெண்ணுக்கு ஏராளமாக மதுவை கொடுத்திருக்கிறார்.

அவளால் நிற்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டபோது, அவளை அவளது அறையில் கொண்டு விடுவதாக கூறி அழைத்துச் சென்றிருக்கிறார் அந்த நபர்.

ஆனால் அவளை அவளது அறைக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக, அந்த ரிசார்ட்டின் தரை தளத்திற்கு இழுத்துச் சென்று வன்புணர்வுக்கு உள்ளாக்கியிருக்கிறார் அவர்.

பின்னர், அவளுக்கு உடை உடுத்திய அந்த நபர், எதுவுமே நடவாததுபோல், அவளை அவளது அறைக்கு கொண்டு விட்டிருக்கிறார்.

மறு நாள் எழுந்த அந்த பெண், ஏன் தனது உடல் பயங்கரமாக வலிக்கிறது என்று திகைத்தபோதுதான், முன் தினம் நடந்தவை அவளுக்கு நினைவு வந்திருக்கிறது. தன் பெற்றோரிடம் நடந்ததை அவள் கூற, அவர்கள் அதிர்ந்துபோய் பொலிசாரிடம் புகாரளித்திருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்ட அந்த நபர், தன்னிடம் அந்த பெண் தனக்கு 20 வயது என்று கூறியதாகவும், அவள் பெரிய பெண் போல மேக் அப், உடை எல்லாம் அணிந்திருந்ததால் தானும் அதை நம்பிவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அந்த பெண்ணிடம் நீதிமன்றத்தில் அவர் மன்னிப்பு கோரினார் என்றாலும், அவளது சம்மதத்தின்பேரிலேயே இருவரும் பாலுறவில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரையில் சம்மதத்தின் பேரில் பாலுறவு கொள்வதற்கான வயது 16.

15 வயதுக்கு கீழ் உள்ளவர்களுடன் உறவு கொள்பவர்கள் வன்புணர்வு செய்ததாக கருதப்பட்டு தண்டனைக்குள்ளாவார்கள்.

அரசு சட்டத்தரணி, அந்த நபருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 10 ஆண்டுகள் சுவிட்சர்லாந்துக்குள் நுழைய தடையும் விதிக்கவேண்டும் என நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.

ஆனால், தனது மகளை சீரழித்தவனுக்கு வெறும் 48 மாத தண்டனை மிகவும் குறைவு என்று கூறியுள்ளார் அந்த பெண்ணின் தந்தை. வழக்கு தொடரும் நிலையில், தீர்ப்பு இன்னும் சில வாரங்களில் வழங்கப்பட உள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்