சுவிட்சர்லாந்தில் நடந்த மிக மோசமான சம்பவம்: தாயும் சேயும் கவலைக்கிடம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட மிக மோசமான சாலை விபத்தில் பிஞ்சு குழந்தையுடன் தாயார் ஒருவரும் சிக்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

சூரிச் மண்டலத்தின் 5-வது பெரிய நகரமான Dietikon-ல் சனிக்கிழமை இரவு இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதில் 42 வயதான தாயார் ஒருவரும் அவரது 4 வயது பெண் பிள்ளையும் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் 20 வயது சாரதியும் அவரது 19 வயது நண்பரும் லேசான காயங்களுடன் தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

விபத்தை அடுத்து அந்த வாகனத்தினுள் சிக்கியிருந்த குறித்த தாயாரை மீட்பு படையினர் வந்தே, வாகனத்தை பிளந்து வெளியே மீட்டுள்ளனர்.

20min.ch

இதனையடுத்து படுகாயமடைந்த குழந்தையை ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தாயாரை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மண்டல பொலிசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுவிட்சர்லாந்தில் சமீபத்தில் நடந்த விபத்துகளில் இது மிகவும் மோசமான விபத்து என நேரிடையாக பார்த்த பலர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்