புலம்பெயர்வோருக்கு ஆதரவாக வாக்களித்த சுவிஸ் நாடாளுமன்றம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

கடந்த வாரம் சுவிஸ் கட்சி ஒன்று சுவிட்சர்லாந்திற்குள் புலம்பெயர்ந்து வருவோரைக் கட்டுப்படுத்தும் வகையில் திட்டம் ஒன்றை முன்வைத்தது.

சுவிஸ் மக்கள் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்தான், இந்த திட்டத்தை முன்வைத்தார்கள் அவர்கள் முன்வைத்துள்ள initiativeஇன்படி, சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருபவர்களது விண்ணப்பம், அவர்களது நாட்டிலோ அல்லது அதற்கருகில் உள்ள இடம் ஒன்றிலோ அமைக்கப்படும் ஒரு பாதுகாப்பான இடத்திலோ பரிசீலிக்கப்படும்.

அதாவது அவர்கள் சுவிட்சர்லாந்துக்குள் அனுமதிக்கப்படாமலே தடுத்து நிறுத்தப்படுவார்கள்.

விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே அவர்கள் சுவிட்சர்லாந்துக்குள் வரமுடியும்.

ஆனால் அந்த திட்டம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, அதை 123 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிக்க, 63 பேர் மட்டுமே அதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

சுவிஸ் மக்கள் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அதற்கு ஆதரவளித்தனர்.

ஒருவேளை பெரும்பான்மையினர் அந்த திட்டத்தை ஆதரித்திருப்பார்களானால், அரசு, மக்களின் தடையற்ற போக்குவரத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும்.

நீதித்துறை அமைச்சர் Karin Keller-Sutter கூறும்போது, இந்த initiativeஆல், சுவிஸ் பிரெக்சிட் ஒன்று நிகழ வேண்டிய சூழல் ஏற்பட்டு, மோசமான பொருளாதார தாக்கத்தை அது ஏற்படுத்தியிருந்திருக்ககூடும் என்றார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்