சுவிஸில் நூதன முறையில் மறைவு செய்யப்பட்டிருந்த இளைஞரின் சடலம்: பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸ்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் கொல்லப்பட்டு நூதன முறையில் மறைவு செய்யப்பட்டிருந்த இளைஞரின் சடலம் தொடர்பில் பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் Thurgau மண்டலத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 27 வயது இளைஞர் தொடர்பில் நீண்ட 12 ஆண்டுகளாக பொலிசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Thurgau மண்டலத்தில் குடியிருந்து வந்த எகிப்திய இளைஞர் ஒருவர் 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது உடம்பு முழுவதும் துப்பாக்கி காயங்கள் இருந்துள்ளது. கண்களில் துப்பாக்கி குண்டு துளைத்துள்ளது.

அவர் கொல்லப்பட்டு, அவரது சடலத்தை தண்ணீருக்குள் மூழ்கடித்து, சடலத்தின் மீது சுமார் 30 பவுண்டுகள் எடை கொண்ட சாலை கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் கான்கிரீட் கல் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது.

வழிபோக்கர் ஒருவரே இந்த சடலத்தை கண்டறிந்து பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளார். குறித்த கல்லை தயாரித்த நிறுவனம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையானது முழுமை பெறாமல் பின்னர் கைவிடப்பட்டது.

டிசம்பர் 10 ஆம் திகதி அந்த எகிப்திய இளைஞர் Schaffhausen மண்டலத்தில் அமைந்துள்ள தமது குடியிருப்பில் பார்த்ததாக பலர் சாட்சியம் அளித்துள்ளனர்.

மட்டுமின்றி, இந்த கொலை விவகாரம் தொடர்பில் தகவல் தெரிவிக்கும் பொதுமக்களுக்கு 10,000 பிராங்குகள் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், இந்த மர்ம கொலை தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் ஏதும் பொலிசாருக்கு கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்