சுவிற்சர்லாந்தில் சிறப்பாக நடைபெற்ற நுசத்தல் தமிழர் ஒன்றிய சங்கம விழா

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

நுசத்தல் தமிழர் ஒன்றிய சங்கம விழா 12 கடந்த ஞாயிற்றுக்கிழமை 06.10.2019 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மண்டபம் நிறைந்த மக்கள் மத்தியில் இளயை தலைமுறையினரும் இணைந்து நிகழ்ச்சிகளைத்தொகுத்து வழங்கினார்கள்.

விழா முற்பகல் பதினொருமணிக்கு ஆரம்பமாகியது நுழைவாயிலில் நிறைகுடம் குத்துவிளக்கென்பனவும் வரவேற்பு ஏற்பாடுகளும் மங்கலப்பொருட்களும் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பிரதமவிருந்தினர்களையும் சிறப்பு விருந்தினர்களையும் திட்டமிட முறையில் தமிழர்களின் பண்பாட்டு முறைகளுடன் நுழை வாயிலிருந்து மேடைவரை விழா ஏற்பாட்டாளர்கள் மங்கல இசை ஒலிபெருக்கியில் முழங்க அழைத்துச்சென்றார்கள்.

ஆரம்ப நிகழ்சியாக பிரதமவிருந்தினர்கள் சிறப்பு விருந்தினர்கள் மங்கல விளக்கேற்றி வைத்தார்கள்.

வணக்கம் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து மாணவர்களால் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கபட்டதுடன் வரவேற்புரை வரவேற்பு நடனம் சிறப்பு விருந்தினர் உரை இடம்பெற்றது . Monieur Jean Volet ( உதவி நிறுவன அதிகாரி)

தமிழ்ப்பெண்களெல்லாம் அழகாக இருக்கின்றீர்கள் என்று உரையினை ஆரம்பித்தார்.

2004 ஆண்டில் ஆழிப்பேரலை அழிவின்பின் மீனவமக்கள் வாழ்ந்த பகுதிகளில் தமது தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியதாகவும்சிவப்பு நிறம் கலந்த படகுகளாயின் அவைதங்களால் வழங்கப்பட்டதாக நீங்கள் கருதலாம் என்றும், தனது மகள் தமிழ்நாட்டில் பணியாற்றிக்கொண்டிருக்கையில் மகளுக்கு தமிழ்நாட்டில் மகப்பேறு நடந்ததாகவும் தங்களுக்கு சோறே உணவாக்கிடைத்ததாகவும் உங்கள் பண்பாடு உணவுப்பழக்கங்கள் வழிபாட்டு முறைகள் எல்லாம் எனக்க தெரியும்.

அது எனக்கு பிடிக்கும் என்று இங்க நுசத்தலில் தங்களால் குடியேற்ற வாதிகளுக்கு உதவும் நோக்குடன் ஆரம்பநிலையாக பிரஞ்சுமொழி படிக்கும் வசதிகளும் நூலினால் குளிராடைகள் நைதல் (செய்தல்) போன்றவற்றுக்கான வசதிகள் இருப்பதாகவும் இதனை தமிழர்களாகிய நீங்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறி தனது இறை நம்பிக்கை பற்றியும் தனது குடும்பம் இறைவழிபாடுகளுடன் எப்படியியங்குகின்றது என்பனவற்றையும் கூறியிருந்தார்.

சிறுவர்களின் கலைநிகழ்ச்சிகள் சிலவற்றைத் தொடர்ந்து ஒன்றியத்தலைவர் யெராட்லினரன் அவர்களின் தலைமையுரை ஒத்துழைப்புகள் ஒற்றுமைகள் தமது ஒன்றியச்செய்பாடுகள் உதவித்திட்டங்ளை விபரித்தது.

தொடர்ந்து தமிழ்ப்பண்பாடு பற்றிய இளைஞர் ஒருவரின நன்கமைந்த கவிதையும் தமிழ்மொழியின் பெருமைபற்றிய கவிதையும் தமிழ்மொழிபற்றிய சிறுவனின் உரையென்பன சிறப்பாக நடைபெற்றது.

தாய்நாட்டில் கோழிவளர்ப்பிற்கு தமது ஒன்றியம் வழங்கிய உதவிக்காட்சிகள் திரையில் காண்பிக்கப்படது. அதனைத் தொடர்ந்து மதியநேர உணவுக்கான இடைவேளை இடம்பெற்றது.

எழுச்சிப்பாடலுக்கான நடன நிகழ்சியுடன் பிற்பகல் நிகழ்சிகள் ஆரம்பமாகி கிராமிய நடனங்களின் பின் சிறப்புவிருந்தினர் உரைக்காக சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்ண் வள்ளுவன் பாடசாலை முதல்வர் திரு பொன்னம்பலம்

முருகவேள் ஆசிரியர் அவர்கள் அழைக்கப்பட்டார். நுசத்தல் மாநிலச்சிறப்புகள் இயற்கையழகு தமிழர்களின் சங்கமவிழாவின் அழகு தமிழ்மொழி மீதான பற்று பற்றி சிறுகவிதையுடன் ஆரம்பித்து தமிழ்தேசியம்

தமிழ்ப்பண்பாடு தமிழ்மொழியின் தொன்மையினை குமரிக்கண்டம்வரை இன்றைய கீழடித்தகவல்களை எடுத்துரைத்து திருக்கறள் ஏன் உலகப்பொதுமறையானது தமிழ்மொழியை கற்பதென்று எழுத வாசிக்கக்கற்பதோடு நில்லாது தமிழ் மொழியால் பண்பாட்டால் நல்வாழ்வை பெறும்வழிகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும் .

மேலும் இது தமிழர்களின் அடிமை வாழ்வுக்காலம் அல்ல தமிழர்களின் பண்பாட்டுக்காலம்.

தமிழர்கள் உலகிற்கு தாக்கமாக அறிவியலில் நன்றியுணர்வில் உயர்நிலையில் வாழ்ந்தகாலமே தமிழர்காலம் தமிழ்நாகரிக காலம் அதனை எடுத்துரைப்பதாக கீழடியில் தொழிற்சாலைகளுக்கான ஆதாரங்கள் நெசவுத்தொழில் இடம்பெற்றதற்கான கைதறிச்சாதனங்கள் கிடைத்துள்ளன.

எழுத்தறிவுடன் கட்டடக்கலையுடன் ,நகரநாகரீகத்தில் சிறந்து உலகளவில் வணிகம்செய்து வாழ்ந்ததற்காகான ஆதாரங்களுடன், கி.மு 2600 ஆண்டுகளுக்கு முன்னர் என்ற கால அளவும் கணிக்கப்பட்டதனைச்சுட்டிக்காட்டி ஈழத்தமிழர்களின் ஊர்ப்பெயர்கள் தூயதமிழிலும் மக்களின் பெயர்கள் தூய சமஸ்கிருதத்திலும் இடப்பட்டு புலம்பெயரநாடுகளிலும் தமிழ் பிள்ளைகளக்கு சமஸ்கிருதப்பெயர்களும் வடமொழி எழுத்துகள் கலந்த வடமொழிப்பெயர்களும் சூட்டப்பட்டிருப்பது தமிழ்மொழிக்கும் தமிழ் மொழிப்போராளிகளுக்கும் தமிழ் ஈகையர்களுக்கு நாங்கள் செய்யும் துரோகமாகவே இது இருக்கின்றது.

தமிழ் பாடசாலைகளை நடத்துகின்றோம் என்று பெருமைப்படும் அதேவேளை பிள்ளைகளின் பெயர்கள் தமிழ்மொழியில் இல்லை அத்துடன் தமிழ்மொழியில் முதல்வராத எழுத்துக்கள் என்ற வரையறைக்கு முரணாக பெயர்கள் மாணவர்ளுக்கு வைக்கப்பட்டுக் கொண்டிருப்பதை எவரும் கண்டுகொள்ளாதிருப்பது பெரும் கவலைக்கரியசெயல் என்பதனைச் சுட்டிக்காட்டி விழாவில் மாணவர்களின் இளையவர்களின் நுசத்தல் தமிழ்மக்களின் ஒற்றுமையான செற்பாடுகளைப்பாராட்டி சிறப்புரையினை நிறைவு செய்திருந்தார்.

கலைநிகழ்வுகள் நாடகங்கள் நல்வாய்ப்பு சீட்டிழுப்பு (அதிஸ்ட்டலாபச்சீட்டிழுப்பு) என்பன இடம்பெற்று மாலை எழுமணியளவில் நுசத்தல் மாநில தமிழர் ஒன்றிய விழாவின் 12 ஆவது சங்கம நிகழ்வுகள் நன்றியுரையுடன் இனிதே நிறைவு பெற்றது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்