பேர்ண் நகரப்பகுதியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு ஓர் அரியசந்தர்ப்பம்!

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

பேர்ண் நகரப்பகுதியில் வாழும் வெளிநாட்டவர்கள் யேர்மன்மொழிகற்பதற்கான ஓர் அரிய சந்தர்ப்பத்தினை பேர்ண் நகர நிர்வாகப்பகுதி நடைமுறைப்படுத்தியுள்ளது.

எதிர்வரும் 19.09.2019 இல் பேர்ண் நகரப்பகுதியில் வாழும் வருமானம் குறைந்த (Prämienver billigung வைத்திருப்பவர்கள்) மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மக்களுக்கு ஜேர்மன் மொழிகற்பதற்காக Sfr 400 பெறுமதியான 500 பத்திரங்களை (DeutschBon)வழங்குகின்றார்கள்.

இவ் பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி 03.11.2019 ஆகும்.

இவ் Sfr 400 பெறுமதியானயேர்மன்மொழிகற்பதற்கானபத்திரங்களைப் பெறுவதற்கானவிண்ணப்பங்களை மேற்கொள்ள விரும்புபவர்கள்,பேர்ண் மேற்குப்பகுதியில் INFOTIME என்னும் அமைப்பில் தமிழ் மக்களுக்குப் பொறுப்பாகக் கடமையாற்றும் ஆலோசனையாளர் இணையர் நந்தினிமுருகவேளிடம் விண்ணப்பங்களைமேற்கொள்ளலாம்.

இவ் விண்ணப்பத்தினை மேற்கொள்ள விரும்புபவர்கள், Prämienverbilligung பத்திரத்தினையும் தவறாது கொண்டுவருமாறு இணையர் நந்தினிமுருகவேள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றார்.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 9.00 -11.00 Bethlehem Kircheஇல் அவரது அலுவலகத்தில் இந்த விண்ணப்பத்தினை மேற்கொள்ளலாம்.

இதேவேளை, குறித்த ஜேர்மன் மொழிக்கானபத்திரத்தினைப் பெற்று ஜேர்மன் மொழியை சிறப்பாகக் கற்றுபயனடையுமாறு பேர்ண் மேற்குப்பகுதி சமூகஉத்தியோகத்தர்கள் அனைவரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்