சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் சீஸ் வாங்கினீர்களா?: உங்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்பான பாலாடைக்கட்டியில் (சீஸ்) நோய்க்கிருமி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, அந்த தயாரிப்பை பயன்படுத்தவேண்டாம் என உணவு பாதுகாப்பு அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Migros என்னும் நிறுவனம் ‘Gorgonzola e Mascarpone’ என்ற பாலாடைக்கட்டியில், லிஸ்டீரியா என்னும் நோய்க்கிருமி தொற்று இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த கிருமி இருக்கும் பாலாடைக்கட்டியை உண்பதால், ஃப்ளூ போன்ற காய்ச்சல், தலைவலி மற்றும் தலை சுற்றல் ஏற்படும்.

கர்ப்பிணிகளோ, குறைந்த நோயெதிர்ப்பு சக்தி உடையவர்களோ இந்த பாலாடைக்கட்டியை உட்கொண்டிருந்தால், அவர்களுக்கு இத்தகைய அறிகுறிகள் காணப்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுமாறு Migros நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

தற்போது பாதிக்கப்பட்டுள்ள பாலாடைக்கட்டி 2125.830.240 என்ற தயாரிப்பு எண்ணையும் 21.10.19 என்ற காலவதி திகதியையும் கொண்டிருக்கும்.

இந்த தயாரிப்பு கடைகளிலிருந்து அகற்றப்பட்டுவிட்டாலும், ஒன்லைன் மூலமும் விற்கப்பட்டதாக தெரிகிறது.

எனவே இந்த தயாரிப்பை யாராவது வாங்கியிருந்தால், அதை உண்ண வேண்டாம் என்று, பெடரல் உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடை அலுவலகமும் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்