சுவிஸ் விமானத்தில் இருந்து திடீரென்று வெளியேற்றப்பட்ட பயணிகள்: பரபரப்பான விமான நிலையம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சூரிச் விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரான சுவிஸ் விமானம் ஒன்றில் இருந்து மொத்த பயணிகளையும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெள்ளியன்று பகல் சுமார் 8.30 மணியளவில் சூரிச் விமான நிலையத்தில் இருந்து செக் குடியரசு நாட்டின் தலைநகரான Prague நகருக்கு புறப்பட தயாரான சுவிஸ் விமானம் ஒன்றில் இருந்து திடீரென்று அவசர எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது.

இதனையடுத்து அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும் உடனடியாக வெளியேற்றியுள்ளனர்.

மட்டுமின்றி குறித்த விமானத்தில் புறப்பட தயாரான பயணிகளுக்காக மாற்று விமானம் ஒன்றையும் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், திடீரென்று அவசர எச்சரிக்கை ஏற்பட காரணம் என்ன என்பது தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில், அது விமான ஊழியரின் தவறால் நடந்தது என தெரியவந்தது.

இதனிடையே ஒரு மணி நேரத்திற்கு பின்னால், மாற்று விமானத்தில் அந்த பயணிகளை அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவத்தால் சூரிச் விமான நிலையம் ஒரு மணி நேரத்திற்கு பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்