குழந்தையை பால்கனியிலிருந்து வீசி விடுவதாக மிரட்டிய நபரால் சூரிச் நகரில் பரபரப்பு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சூரிச் நகரில், தனது குழந்தையை பால்கனியிலிருந்து வீசி விடுவதாக மிரட்டிய ஒரு நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் குழந்தையை வெளியே வீசிவிடுவதாக மிரட்டிய அந்த நபர், ஒரு கட்டத்தில் குழந்தையை பால்கனிக்கு வெளியே போட்டு விடுவது போல் சைகை செய்ததால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சூரிச் பொலிசார் அந்த வீட்டை சுற்றி வளைக்க, மருத்துவ உதவிக்குழுவினரும் தீயணைப்புப்படையினரும் அந்த பகுதியில் கூடினர்.

இஸ்லாமியரான அந்த 45 வயது நபர், தனது கோரிக்கைகளை இமாம் ஒருவரிடம் மட்டுமே கூறுவேன் என்று கூற, பொலிசார் அதற்கு சம்மதித்தனர்.

ஐந்து மணி நேரத்திற்கு பிறகு அவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேற, தயாராக இருந்த பொலிசார் அவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட குழந்தை அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அவரது கோரிக்கைகள் என்ன என்பதை பொலிசார் தெரிவிக்கவில்லை.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்