சுவிட்சர்லாந்தில் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் வாலெய்ஸ் மண்டலத்தில் பச்சிளம் குழந்தையை கொன்று குப்பைத் தொட்டியில் வீசிய கொடூர தாயாருக்கு நீதிமன்றம் தண்டனை அறிவித்துள்ளது.

வாலெய்ஸ் மண்டலத்தின் Sierre மாவட்ட நீதிமன்றத்தில் இதுபோன்ற வழக்கிற்கு தண்டனை வழங்கப்படுவது இதுவே முதன் முறை என கூறப்படுகிறது.

33 வயதான அந்த சுவிஸ் தாயாருக்கு பச்சிளம் குழந்தையை கொன்ற குற்றத்திற்காக நிபந்தனைகளுடன் கூடிய 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தில், குறித்த பெண்மணி குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார்.

தமது கர்ப்பத்தை குடும்பத்தாரிடம் இருந்து மறைத்து வந்துள்ள அவர், தங்களது குடியிருப்பிலேயே தனியாக குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

குழந்தை பிறந்த சில மணி நேரத்தில், பிளாஸ்டிக் பையில் குழந்தையை திணித்த அவர், பின்னர் ரயில் நிலையத்தில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் அதை மறைவு செய்துவிட்டு மாயமாகியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக Sierre மாவட்ட நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை தற்போது வாலெய்ஸ் மண்டல நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்