இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட சுவிஸ் நாட்டவர்... இருதயத்தை துளைத்திருந்த கத்தி: பகீர் சம்பவம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
343Shares

சுவிட்சர்லாந்தில் 55 வயதான நபர் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் அவரது காதலி நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் உள்ள Schwarzenburg கிராமத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் திகதி இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

தற்போது இந்த கொலை வழக்கு தொடர்பில் கைதான 28 வயது ஹங்கேரிய பெண்மணி ஒருவர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட 55 வயது சுவிஸ் நாட்டவரும் குறித்த ஹங்கேரிய பெண்மணியும் காதலர்களா அல்லது எந்தவகையான உறவு என்பது தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை.

சம்பவத்தன்று பகல், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த சுவிஸ் நாட்டவர் ஹங்கேரிய பெண்மணியை துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

Picture: PD

இதனிடையே சமையலறைக்கு விரைந்த குறித்த ஹங்கேரிய பெண்மணி கத்தியுடன் திரும்பியுள்ளார்.

பின்னர் சுவிஸ் நாட்டவரின் மார்பில் குத்தியுள்ளார். மட்டுமின்றி அந்த மாலை நேரத்தில் மட்டும் ஆம்புலன்ஸ் சேவைக்கு 4 முறை அழைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இடது மார்பில் ஆழமாக இறங்கிய கத்தியால், அந்த சுவிஸ் நாட்டவருக்கு சுமார் 2.5 லிற்றர் ரத்தம் வீணானதாகவும், இதனாலையே அவர் மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் சாட்சியம் அளித்துள்ள கொல்லப்பட்ட சுவிஸ் நாட்டவரின் பிள்ளைகள் இருவர்,

தங்களது தந்தை உளவியல் பாதிப்புக்கு இரையானவர் எனவும், ஆனால் வன்முறைக்கு ஒருபோதும் அவர் உடன்பட்டது இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

Picture: PD

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்