சுவிட்சர்லாந்தில் ஒரு வேடிக்கையான சட்டத்தால் அபராதம் கட்டிய ஒரு காதலர்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் தனது காதலியுடன் நெருக்கமாக இருந்த ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

காரணம்? சூரிச்சைச் சேர்ந்த அந்த நபர் தனது காதலிக்கு 16 வயது ஆவதற்கு 19 நாட்கள் இருக்கும் நிலையில், அவளுடன் பாலியல் ரீதியான உறவு வைத்துக்கொண்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் ஒரு பெண்ணுடன் அவளது சம்மதத்தின்பேரில் உறவு வைத்துக்கொள்வதற்கான சட்டப்பூர்வ வயது 16.

இது ஒரு பக்கம் இருக்க, சம்பவம் நடந்த போது, அந்த காதலருக்கு 19 வயதாகி 32 நாட்கள் ஆகியிருக்கிறது.

அதாவது, தனது காதலியுடன், ஒரு 32 நாட்களுக்கு முன் அவர் நெருக்கம் காட்டியிருந்தாரானால், அவருக்கு எந்த பிரச்னையும் ஏற்பட்டிருக்காது.

காரணம், சுவிட்சர்லாந்து சட்டம் அப்படி! ஆம், 19 வயதுடைய ஒரு ஆண், சிறுவனாக கருதப்படுவதால், அவருக்கு 19 வயதும், அந்த பெண்ணுக்கு 15 வயதும் இருந்தபோது இப்படி ஒரு பிரச்னை வந்திருந்தால், யாரும் அவர்களை ஒன்றும் சொல்லியிருக்கமாட்டார்கள்.

ஏனென்றால், சிறுவர்களுக்குள் பாலியல் ரீதியான உறவு வைத்துக்கொள்வதற்கு சுவிட்சர்லாந்தில் தண்டனை எதுவும் இல்லை.

இப்படி ஒரு வேடிக்கையான சட்டத்தால், ஒரு 52 நாள் பிரச்னையால், அந்த காதலர் அபராதம் கட்டவேண்டி வந்திருக்கிறது!

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்