சுவிஸில் கர்ப்பிணி தாயாரை சுத்தியலால் தாக்கிய வெளிநாட்டவர்: வெளியான பகீர் காரணம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் நகரில் கர்ப்பிணி தாயாரை சுத்தியலால் தாக்கி கொலை செய்ய முயன்ற வெளிநாட்டவருக்கு குற்றவியல் நீதிமன்றம் தண்டனை அறிவித்துள்ளது.

குறித்த 34 வயது செர்பியா நாட்டவர் கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்தில் குடியிருந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பெண் ஒருவருடன் உறவில் இருந்து வந்துள்ளார்.

இதனிடையே 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தாம் கர்ப்பமாக இருப்பது தெரியவர, தமது காதலரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

ஆனால் குழந்தையை கருக்கலைப்பு செய்துகொள்ள அவர் கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு பெண் தரப்பில் எதிர்ப்பு வரவே, இருவருக்கும் இடையே இந்த விவகாரம் தொடர்பில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த நாள் பகல் குறித்த பெண்மணி தங்கியிருக்கும் குடியிருப்புக்கு சென்ற அந்த நபர் சுத்தியலால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் உயிர் தப்பிய அவருக்கு சில விலா எலும்புகள் முறிந்ததுடன், கர்ப்பிணியான அவரது வயிற்றில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவந்து.

இதனையடுத்து நான்கு நாட்கள் அவசர சிகிச்சையில் இருந்து அவர் உயிர் மீண்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் விசாரணை மேற்கொண்ட லூசெர்ன் குற்றவியல் நீதிமன்றம், குறித்த செர்பியா நாட்டவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 12 ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியேற்றப்படவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்