சுவிட்சர்லாந்து தேர்தல்: ஆபாச இணையதளங்களில் களமிறங்கும் கட்சி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஞாயிறன்று சுவிட்சர்லாந்தில் ஃபெடரல் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், தேர்தல் கட்சி ஒன்று ஆபாச இணையதளங்களை குறிவைத்து களமிறங்கியுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் பைரேட் கட்சி என்னும் ஒரு கட்சி, பிரபலமான ஆபாச இணையதளங்களில் பிரசாரம் செய்ய தொடங்கியுள்ளது.

’2 நிமிடங்கள் ஒதுக்குங்கள், 4 ஆண்டுகள் நிம்மதியாக இருக்கலாம்’ என்ற வாசகத்துடனான தேர்தல் பிரசார வாசகங்கள் அந்த இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

தாங்கள் இலக்கு வைக்கும் குழுவினரை ஆபாச இணையதளங்கள் வாயிலாக சென்றடைய முடியும் என தாங்கள் நம்புவதாக, அந்த கட்சியின் பிரசாரக் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

தங்கள் எதிர்பார்த்ததுபோலவே தங்களுக்கு நேர்மறையான பதில்கள் கிடைத்துக்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்