சுவிட்சர்லாந்து தேர்தல்: இது பசுமை அலை அல்ல, பசுமை சுனாமி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து தேர்தலில் பசுமைக் கட்சியினர் அமோக ஆதரவைப் பெற்றுள்ளதையடுத்து, இது பசுமை அலை கூட இல்லை, இது ஒரு பசுமை சுனாமி என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விமர்சித்துள்ளார்.

இம்முறை சுற்றுச்சூழலை இலக்காகக் கொண்ட பசுமைக் கட்சியினரும், பசுமை லிபரல் கட்சியினரும் சுமார் 20 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளார்கள்.

இந்த மாபெரும் வெற்றியைக் கண்டு வாயடைத்துப்போன பசுமைக்கட்சியின் துணைத் தலைவரான Caroline Vara, இது ஒரு பசுமை அலை அல்ல, இது ஒரு சுனாமி, இது ஒரு புயல் என்றார் பசுமைக் கட்சியின் தலைவரான Regula Rytz கூறும்போது, இந்த வெற்றியால் தான் புளகாங்கிதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

AFP via Getty Images

மக்கள் பசுமை அரசியலை விரும்புகிறார்கள் என்பது இந்த வெற்றி மூலம் தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளார் அவர்.

சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, நாட்டை ஆளும் பெடரல் கவுன்சிலிலுள்ள ஏழு உறுப்பினர்களில், ஓராண்டுக்கு ஒருவர் வீதம் மாறி மாறி ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

AFP

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்