சுவிட்சர்லாந்தில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதியின் புகைப்படம் வெளியானது

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிஸில் குடியிருப்பு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட தம்பதியின் புகைப்படம் உள்ளிட்ட பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜூரா மண்டலத்தில் திங்களன்று பகல் கணவன் மனைவி இருவரின் சடலம் மீட்கப்பட்டது.

இவர்களின் மூன்று பிள்ளைகளில் ஒருவரே குறித்த சம்பவத்தை முதலில் கண்டறிந்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்தவர்.

குறித்த தம்பதி கத்தியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பொலிசார் அது தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிட மறுத்துள்ளனர்.

மரணமடைந்த தம்பதிகள் பறவைகள் மீது ஆர்வம் கொண்டவர்கள் எனவும், இவர்களுக்கு என பறவைகள் தொடர்பில் நிறுவனம் ஒன்றும் இருப்பதாகவும்,

அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியே இவர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Image: Facebook

இருவரின் மரணமும் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என அவர்களின் நண்பர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தம்பதிகள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மட்டுமின்றி, இதனால் இருவரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளதும், பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும் குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைக்கு பின்னரே, பின்னணி தகவல் வெளிவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Image: Facebook

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்