சுவிட்சர்லாந்தில் ராக்கெட் வேகத்தில் பரவும் அம்மை நோய்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் 2019ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுக்குள், 214 பேருக்கு மண்ணன் அல்லது மணல்வாரி என்னும் measles நோய் பரவியுள்ளதாக ஃபெடரல் பொது சுகாதாரத்துறை அலுவலகம் பதிவு செய்துள்ளது.

2108இல் இருந்ததைவிட இந்த ஒன்பது மாதங்களில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை ஆறு மடங்கு அதிகமாகும்.

13 மாகாணங்களில் இந்த அம்மை நோய் காணப்பட்டாலும், பெர்னில் மட்டும் 83 பேருக்கு மண்ணன் உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 20 சதவிகிதத்தினர், 10 வயதுக்கு கீழுள்ளவர்கள். 23 சதவிகிதத்தினர், 10 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். 57 சதவிகிதத்தினர் 20 வயதுக்கு மேல் உள்ளவர்கள்.

இந்த ஆண்டைப் பொருத்தவரை, இந்த அம்மை நோய் காரணமாக இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர்.

Keystone

முதலாம் நபர், 30 வயதுடைய தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஒருவர், தனது உறவினர்களிடமிருந்து நோய் தொற்றி பாதிக்கப்பட்டவர்.

இரண்டாமவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர். அவருக்கு அம்மை நோய் ஏற்பட்டு சில நாட்களுக்குள் நிமோனியா தாக்கி உயிரிழந்தார்.

இது போக, 45 பேர் மண்ணன் அல்லது மணல்வாரி நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவேண்டிய சூழல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்