சுவிட்சர்லாந்திலுள்ள இந்தியர்களுக்கு தீபாவளி தொடர்பில் மகிழ்ச்சியான ஒரு செய்தி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

தாய்நாட்டை விட்டு வேலை காரணமாக அல்லது பல்வேறு காரணங்களால் சுவிட்சர்லாந்தில் வாழும் இந்தியர்களுக்கு, தங்கள் குடும்பத்துடன் தங்கள் தாய்நாட்டில் தீபாவளியைக் கொண்டாட முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கலாம்.

அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

சுவிட்சர்லாந்தில் வாழும் இந்திய சமூகத்தினர், பல இடங்களில் கூடி தீபாவளியைக் கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, இந்திய சமூகத்தினர் சூரிச், ஜெனீவா, பேசல், பாடன், பெர்ன் மற்றும் லாசேன் ஆகிய பெரிய நகரங்களில் அதிக அளவில் வாழ்கின்றனர்.

இந்த தீபாவளிக்கு, அந்த நகரங்களில் உள்ள இந்தியர்கள் எந்தெந்த திகதிகளில் என்னென்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

Rajesh JANTILAL / AFP

பெர்ன் பெர்ன் இந்திய சங்கம் தனது வருடாந்திர தீபாவளிக் கொண்டாட்டங்களை, நவம்பர் மாதம் 2ஆம் திகதி Bürenparkஇல் கொண்டாட திட்டமிட்டுள்ளது.

நிகழ்ச்சியில், இசை, ஒளியலங்காரம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றுடன், இந்திய உணவு வகைகள் பரிமாறப்படும் விருந்தும் பரிசுகளும் வழங்கப்படும். சூரிச் சூரிச்சில், சூரிச் இந்திய சங்கம் நவம்பர் மாதம் 10ஆம் திகதி Stadthalle Dietikon இல் தீபாவளியைக் கொண்டாட உள்ளது.

நிகழ்ச்சியில், நடனம் மற்றும் பிற கலை நிகழ்ச்சிகள், இந்திய உணவு ஆகியவை உண்டு.

ஜெனீவா ஜெனீவா இந்திய சங்கம் நவம்பர் மாதம் 16ஆம் திகதி தீபாவளிக் கொண்டாட்டங்களை வைத்துக்கொள்வதென முடிவு செய்துள்ளது. இசை நிகழ்ச்சிகளும் விருந்தும் நிச்சயம்.

உலகம் முழுவதும் தீபாவளிப் பண்டிகை எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் காட்டும் வகையில், ஜெனீவாவின் மலேசிய சங்கமும் அக்டோபர் 26ஆம் திகதி தீபாவளிக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஆர்கா ஆர்காவின் Frick நகரில், Padmapada கலாச்சார அமைப்பு ஒளிப் பண்டிகையை, அக்டோபர் மாதம் 25ஆம் திகதி நடத்துகிறது.

Wettingen இந்திய சங்கமும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி தீபாவளி கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

பேசல் வட சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்ட Kalasri என்னும் இந்திய கலை மற்றும் கலாச்சார அமைப்பு நவம்பர் மாதம் 2ஆம் திகதி தீபாவளி நிகழ்வு ஒன்றை நடத்த உள்ளது.

அதில், பல்வகை இந்திய நடனங்களுடன் இந்திய உணவு வகைகளும் பரிமாறப்படும். பெர்னிலுள்ள இந்திய தூதரகம் அளித்துள்ள தகவலின்படி சுவிட்சர்லாந்தில் 1,000 இந்திய மாணவர்கள் உட்பட 24,567 இந்தியர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்