சுவிட்சர்லாந்து வாக்கெடுப்பு எண்ணிக்கையில் நடந்த வேடிக்கையான சம்பவங்கள்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் வாங்கு எண்ணிக்கையின் போது நடந்த சுவாரசிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரையில் எல்லா வாக்காளர்களும் வாக்குப்பதிவு நடக்கும் இடத்திற்கு நேரில் சென்று தங்கள் வாக்கை பதிவு செய்யவேண்டும் என்கிற அவசியம் இல்லை.

விருப்பப்பட்டவர்கள் மட்டும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கை பதிவு செய்யலாம். மற்றவர்கள் தங்கள் வாக்கை தபால் மூலம் அனுப்பலாம்.

இம்முறை அப்படி தபாலில் அனுப்பப்பட்ட வாக்குகளை எண்ணும்போது, பல வேடிக்கையான அனுபவங்களை சந்தித்துள்ளார்கள் ஊழியர்கள்.

சில வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சீட்டில் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் பெயரையும் சேர்த்து எழுதியிருந்தார்கள்.

சில கவர்களில் பணம் இருந்துள்ளது, ஒரு அதிர்ஷ்டசாலி ஊழியருக்கு ஒரு கவரிலிருந்து இன்ஸ்டண்ட் சூப் கிடைத்துள்ளது.

வாக்குச் சீட்டு அனுப்பும் கவருக்குள், வாக்குச் சீட்டை தவிர வேறு என்ன வைத்து அனுப்பப்பட்டாலும், அந்த வாக்கு செல்லாததாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்