சுவிட்சர்லாந்தில் ஏரிக்குள் பாய்ந்த காரில் இருந்த பெண்மணி பலி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் ஏரி ஒன்றிற்குள் பாய்ந்த காரில் இருந்த வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

Thurgau மாகாணத்திலுள்ள Lake Constance என்ற ஏரிக்குள் 84 வயது பெண்மணி ஒருவர் இருந்த கார் ஒன்று பாய்ந்துள்ளது.

அதில் அந்த பெண்மணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பாதி மூழ்கிய நிலையில், வழிப்போக்கர் ஒருவரால் அந்த கார் நேற்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.

விரைந்து வந்த அவசர உதவிக்குழுவினர், அந்த காரை ஏரிக்குள் இருண்டு வெளியே எடுத்தனர்.

காருக்குள் இருந்த பெண்மணி ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அந்த கார் எப்படி ஏரிக்குள் விழுந்தது என்பதைக் கண்டறியும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்