சுவிஸ் சாலையில் இளைஞருக்கு ஏற்பட்ட துயரம்: மரணத்தை கண்ணெதிரே பார்த்ததாக கதறல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் St. Gallen நகரில் பரபரப்பான சாலை நடுவே இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு குற்றுயிராக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றுயிராக மீட்கப்பட்ட 21 வயது இளைஞரின் இதயம் மற்றும் நுரையீரலை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவரது 23 வயது சகோதரி கண்கள் கலங்கியபடி தெரிவித்துள்ளார்.

ஞாயிறன்று பகல் தமக்கு தொலைபேசி மூலம் தகவல் ஒன்று கிடைத்ததாகவும், தமது சகோதரர் குற்றுயிரான நிலையில் சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு தெரிந்தவரையில், தமது சகோதரர் பெண் ஒருவரை கவர்வதற்காக முயன்றதாகவும், ஆனால் அதில் இளைஞர் ஒருவர் குறுக்கிட்டதாகவும்,

அவரே தமது சகோதரரை கொடூரமாக சாலை நடுவே கத்தியால் தாக்கிவிட்டு தப்பியதாகவும் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தை அடுத்து அதிக ரத்தப் போக்கால் சுருண்டு விழுந்த இளைஞர் மூச்சு விடவே சிரமப்பட்டுள்ளார்.

அவரை உடனடியாக மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்ப்பித்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இருப்பினும் உண்மையில் நடந்தது என்ன என்பது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இதனைடையே St. Gallen நகர பொலிசார், தாக்குதலில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்துள்ளதாகவும், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்