சுவிஸ் சாலையில் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞருக்கு நேர்ந்தது என்ன? வெளியான தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவரும் இளைஞருக்கு ஆதரவாக மருத்துவமனை வளாகத்தில் அவரது நண்பர்கள் திரளானோர் குவிந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக நிபுணர்கள் தெரிவித்த கருத்து அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் St. Gallen நகரில் பரபரப்பான சாலை நடுவே கடந்த ஞாயிறன்று இளைஞர் ஒருவரால் 21 வயது இளைஞர் கொடூரமாக தாக்கப்பட்டார்.

மார்பிலும் நுரையீரலிலும் கத்திக்குத்து காயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இளைஞர் சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார்.

அவர் எப்போது விடுவிக்கப்படுவார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. தாக்குதல் நடத்திய 20 வயது சுவிஸ் இளைஞரை சம்பவத்தன்றே பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஆனால் தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தியை இதுவரை பொலிசாரால் மீட்க முடியவில்லை என தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி, அவர் மீது எந்த பிரிவுகளில் வழக்குப் பதியப்படும் என்பது தொடர்பிலும் அதிகாரிகளுக்கு சந்தேகம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் இளைஞரை காண திரளான இளைஞர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்ததாக கூறப்படுகிறது.

இளைஞர்கள் ஜேர்மனி, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் சமீப காலமாக வகை வகையான கத்தியுடன் திரிவது, ஆண்மைக்குரியது எனவும் வலுவானவர்கள் என்பதை உணர்த்துவதற்காவும் தான் என நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுவே, அவர்களை உடனுக்குடன் முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளுவதாகவும், அதுபோன்ற ஒரு சூழலில் அந்த இளைஞர் தம்மிடம் இருந்த கத்தியால் இந்த இளைஞரை கொடூரமாக தாக்கியிருக்கலாம் என நிபுணர்கள் தரப்பு கருத்து தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்