வாட்டிய கோடை காலம்... சுவிஸ் விவசாயி செய்த செயல்: அபராதம் விதித்த நீதிமன்றம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் கோடையின் உக்கிரம் தாளாமல் அனுமதியின்றி ஆற்றில் இருந்து அதிக தண்ணீரை பயன்படுத்திய விவசாயிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Allmeindstrasse பகுதியில் கடும் கோடை காலத்தின் உக்கிரம் தாளாமல் விவசாயி ஒருவர் Linth ஆற்றில் இருந்து சுமார் 11 பீப்பாய் தண்ணீரை தமது தேவைகளுக்காக பயன்படுத்தியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு நடந்த இந்த விவகாரம் மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

அப்போது தமக்காக வாதாடிய அவர் தம்மை விடுவிப்பதற்காக கெஞ்சினார். தாம் செய்தது சட்டவிரோதம் என குறிப்பிட்ட அவருக்கு நீதிமன்றம் 500 பிராங்குகள் அபராதம் விதித்துள்ளது.

தமது தொழிலில் அனுபவம் வாய்ந்த அந்த விவசாயி மூன்று சட்டங்களை மீறியதாக கூறும் நீதிமன்றம்,

உரிய அதிகாரிகளிடம் இருந்து அனுமதி பெறாததே அவர் செய்த குற்றம் என குறிப்பிட்டுள்ளது.

தமது அவசரத் தேவைக்காகவே 11 பீப்பாய் தண்ணீரை பயன்படுத்தியதாகவும், இதுவே முதல் முறை எனவும் அவர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்