கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவுக்கு நெருக்கமானவர் சுவிஸில் கொலை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு மிகவும் நெருக்கமான சிகை அலங்கார நிபுணர் சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் கொலை செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

சூரிச்சில் உள்ள பிரபலமான ஹொட்டல் ஒன்றில் வெள்ளிக்கிழமை அன்று கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவுக்கு நெருக்கமான Ricardo Marques Ferreira என்பவர் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த ஹொட்டலின் துப்புரவு தொழிலாளர் ஒருவரே வெள்ளிக்கிழமை சுமார் 2 மணியளவில் இவரது சடலத்தை பார்த்துள்ளார்.

படுக்கையில் கத்திக்குத்து காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பொலிசார் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை தேடி வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும், கொலைகாரன் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்