வேலைக்கு செல்லும் பெண்களுக்கு குழந்தைகள் தொல்லையா: கனவுகளும் உண்மையும்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

குறைந்தது இரண்டு குழந்தையாவது பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது, 20 முதல் 29 வயது வரையுள்ள பெண்களுக்கு சுவிட்சர்லாந்து பெண்களின் கனவு! ஆனால் நிஜத்தில்?

50 முதல் 59 வயதுள்ள பெண்களிடம் உங்கள் கனவை நிஜமாக்கினீர்களா என்று கேட்டால், 40 சதவிகிதத்தினர் மட்டுமே ஆம் என்கிறார்கள்.

மற்றவர்களில் கால்வாசிப்பேருக்கு குழந்தை இல்லை! பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற 30 சதவிகிதத்தினர், எல்லா வயது பெண்களுக்கும், குழந்தைகள் இல்லை.

அவர்களில் 70 சதவிகிதம் பேர் குழந்தை பெற்றுக்கொண்டால் அது தங்கள் வேலையை பாதிக்கும் என்று பயப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அதே நேரத்தில் பல்கலைக்கழகத்தில் பயிலாத பெண்களில் 62 சதவிகிதத்தினருக்கும், பல்கலைக்கழகத்தில் பயின்ற ஆண்களில் 37 சதவிகிதத்தினருக்கும், உயர் கல்வி கற்றஆண்களில் 30 சதவிகிதத்தினருக்கும் குழந்தை பெற்றுக்கொள்வது தங்கள் தொழிலை பாதிக்கும் என்ற அச்சம் இல்லை.

1994, 95 காலகட்டத்தில், சிறு குழந்தை உடைய பெண்கள் வேலைக்கு செல்வது அவர்களை பாதிக்கும் என 60% ஆண்கள் கருதிய நிலையில் அது 2018 இல் 36 சதவிகிதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்