சுவிஸ் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட சடலம்: விசாரித்த பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் St. Gallen மண்டலத்தில் ரயில் நிலையம் ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட நபர் தமது துணையை கொலை செய்துள்ள சம்பவம் பொலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

St. Gallen மண்டலத்தின் Heerbrugg ரயில் நிலையத்தில் உள்ளூர் நேரப்படி சுமார் 5.30 மணியளவில் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் தற்கொலை செய்து கொண்ட நிலையில் 63 வயது நபரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

குறித்த நபர் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், அவரது குடியிருப்புக்கு சென்றுள்ளனர்.

அங்கே 49 வயது பெண்மணி ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.

இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் இருவருக்கும் முந்தைய உறவில் பிள்ளைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

(Fss)

சம்பவத்தின் போது பிள்ளைகள் எவரும் குடியிருப்பில் இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரயில் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ள நபர் தமது துணையை கத்தியால் தாக்கி கொலை செய்துவிட்டு பின்னர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பில் அப்பகுதியில் குடியிருக்கும் பலர் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு இருப்பதாக எந்த அறிகுறியும் வெளிப்படுத்தவில்லை என்றே தெரிவித்துள்ளனர்.

கொலைக்கும் அதை அடுத்து நடந்த தற்கொலைக்கும் பின்னணி என்ன என்பது தொடர்பில் விசாரித்து வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்