சுவிட்சர்லாந்தில் ரயில் மோதி பலியான வெளிநாட்டவர்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவர் ஒருவர் ரயில் மோதி பரிதாபமாக பலியானார். பெர்ன் மாகாணத்தில் வசித்துவந்த அந்த 42 வயது நபர், எரித்ரியா நாட்டைச் சேர்ந்தவர்.

Burgdorf நகரில் இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. நேற்று, ரயில் தண்டவாளத்தை ஒட்டி அவர் நடந்துசெல்லும்போது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

பொலிசார் விபத்தாக கருதி இந்த சம்பவத்தை விசாரித்துவருகிறார்கள். ஒருவர் ரயில் பாதையை ஒட்டி நடப்பதைக் கண்ட ரயிலின் சாரதி, உடனடியாக பிரேக் பிடித்தும் ரயில் நிற்கவில்லை.

அதனால் அந்த நபர் ரயிலுக்குள் இழுக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்