பெரிய பூகம்பம் ஒன்று நெருங்கி வந்துகொண்டிருக்கலாம்: சுவிஸ் பூகம்ப ஆய்வகம் எச்சரிக்கை!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிஸ் பூகம்ப ஆய்வகம், பெரிய பூகம்பம் ஒன்று நெருங்கி வந்துகொண்டிருக்கலாம் என எச்சரித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே வலாயிஸ் பகுதியில் அமைந்துள்ள ஆல்ப்ஸ் பகுதியில் தொடர்ந்து சிறிய அளவில் நில அதிர்வுகள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 12 நில அதிர்வுகள், ரிக்டர் அளவில் 2.5க்கும் அதிகமாக பதிவாகின. அந்த நில அதிர்வுகள் பெர்ன் மாகாணத்தின் உயர்ந்த பகுதியான Bernese Oberland வரை உணரப்பட்டன.

குறுகிய காலகட்டத்தில் இத்தனை பூகம்பங்கள் ஏற்படுவது அசாதாரண நிகழ்வு என்று தெரிவித்துள்ள பூகம்ப ஆய்வாளர்கள், ஒரு பெரிய பூகம்பம் வருவதற்கான 10 சதவிகித வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன், 1964ஆம் ஆண்டு இதே பகுதியில், Sion பகுதியைச் சுற்றி, ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 5.8ஆக பதிவான அந்த பூகம்பத்தின்போது 1,500 கட்டிடங்கள் நாசமடைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்