தொலைபேசி வழியே திருமணம்... வெளிநாட்டில் கணவன்: சுவிஸ் இளம்பெண் முன்னெடுக்கும் போராட்டம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் குடும்பத்தினரின் கட்டாயத்தால் சிறார் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் ஒருவர் தற்போது அந்த திருமணத்தை எதிர்த்து போராடி வருகிறார்.

சிரியாவில் இருந்து குடியேறி சுவிட்சர்லாந்தில் பிறந்தவர் தற்போது 19 வயதாகும் சமீரா. இவரே தற்போது சட்ட உதவியுடன் தமது திருமண உறவில் இருந்து விடுபட போராடி வருகிறார்.

சமீராவுக்கு 15 வயது இருக்கும்போது சிரியாவில் இருக்கும் இளைஞர் ஒருவருடன் தொலைபேசி வாயிலாக திருமணம் நடந்துள்ளது.

குடும்பத்தாரின் நிர்பந்தம் காரணமாக ஓராண்டுக்கு பின்னர் மத சடங்குகளுடன் சிரியாவில் வைத்து மீண்டும் திருமணம் நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டு சமீராவுக்கு 18 வயது நிரம்பியது. இதனிடையே சுவிட்சர்லாந்தில் குழந்தை திருமணம் சட்டப்படி செல்லும் என தெரிய வந்த சமீரா கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.

15 வயதில் தொலைபேசியில் செய்துகொண்ட அந்த திருமணத்தில் தமக்கு உடன்பாடு இல்லை என கொந்தளித்த சமீரா,

தமது தந்தை பயன்படுத்தும் தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஆனால் குடும்பத்தார் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்து சமீராவை காப்பாற்றியுள்ளனர்.

இந்த நிலையில் சமீராவின் கணவர் என கூறப்படும் நபர் தற்போது தமது மனைவியுடன் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும்,

அதன்பொருட்டு சுவிட்சர்லாந்தில் குடியேற முயன்று வருவதாகவும் சமீராகவுக்கு தெரிய வந்துள்ளது. மனைவி சுவிஸ் குடிமகள் என்பதால் அவருக்கு சட்ட சிக்கல் ஏதும் இருக்காது.

ஆனால் சமீராவுக்கு இந்த திருமண பந்தத்தில் உடன்பாடு இல்லை எனவும், தமது கணவரின் சுவிஸ் வருகையை தடுத்து நிறுத்த அவர் தற்போது போராடி வருகிறார்.

அந்த இளைஞரின் வருகையை சமீராவுக்கு தடுத்த நிறுத்த முடியாமல் போனால், அவருக்கு முன் இருக்கும் ஒரே வழி, தற்போதிருக்கும் வேலையை துறப்பது மட்டுமே என கூறப்படுகிறது.

பொருளாதார பாதுகாப்பு இல்லாமல், அந்த நபரை சமீராவுடன் சேர்ந்து வாழ சட்டம் அனுமதிக்காது என கூறப்படுகிறது.

மட்டுமின்றி அந்த நபருக்கு பயணத் தடை விதிக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் சமீரா எடுக்கவிருக்கும் முடிவிலேயே, அந்த நபரின் சுவிஸ் வருகையும், இவருடன் சேர்ந்து வாழ்வதும் உள்ளடங்கியுள்ளது என சட்ட ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்