சுவிஸில் வளர்ப்புத் தந்தையால் மகளுக்கும் அவரது தோழிக்கும் ஏற்பட்ட துயரம்: 18 வயதில் நோயால் அவதி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் பகுதியில் வளர்ப்புத் தந்தை ஒருவர் தமது மகளையும் அவரது தோழியையும் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய விவகாரத்தில் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

ஜேர்மன் நாட்டவரான 48 வயது லொறி சாரதியே பாலியல் வல்லுறவு விவகாரத்தில் தற்போது 5 ஆண்டுகள் மற்றும் 2 மாத சிறை தண்டனைக்கு விதிக்கப் பட்டுள்ளார்.

கடந்த 2015 முதல் குறித்த லொறி சாரதி, தற்போது 18 வயதாகும் தமது வளர்ப்பு மகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கி வந்துள்ளார்.

மட்டுமின்றி, தமது வளர்ப்பு மகளின் நெருங்கிய தோழியையும் அந்த நபர் பாலியல் வல்லுறவுக்கு இரையாக்கியுள்ளார்.

இதனால் அந்த இருவரும், குறித்த சாரதிக்கு ஏற்பட்டிருந்த பாலியல் தொடர்பான நோயால் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

விசாரணையின்போது தமது வளர்ப்புத் தந்தைக்கு எதிராக வாக்குமூலம் அளித்த அவர், நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.

இதனால் அந்த வழக்கானது போதிய ஆதாரங்கள் இன்றி கைவிட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையிலேயே, குறித்த வளர்ப்பு மகளின் நெருங்கிய தோழியின் அலைபேசியில் இருந்த குறுந்தகவல்கள், இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்த காரண்மானது.

குறித்த இளம்பெண்ணும் அந்த லொறி சாரதியும் உறவுமுறை பேணி வந்ததும் அம்பலமானது. மட்டுமின்றி, இருவரும் லொறியில் சென்ற சில நாட்களில் பாலியல் உறவு வைத்துக் கொண்டதும் விசாரணையில் வெளியானது.

குறித்த பெண்ணின் வாக்குமூலம் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதுடன், அதில் உண்மை இருப்பதை உறுதி செய்தது.

மட்டுமின்றி, அந்த சாரதியை குறித்த இளம்பெண் காதலித்து வந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து வளர்ப்புமகள் விவகாரத்தில் விடுவிக்கப்பட்ட அந்த நபர், மகளின் தோழி விவகாரத்தில் சிக்கினார்.

தற்போது லூசெர்ன் நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு இழப்பீடாக 12,000 பிராங்குகள் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், அந்த ஜேர்மன் சாரதியை தண்டனை காலம் முடிந்து 10 ஆண்டுகள் நாட்டைவிட்டு வெளியேற்றவும் நீதிமன்ரம் உதரவு பிறப்பித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்