உடலுக்குள் சென்று புற்றுநோய் கட்டிகளை அழிக்கக்கூடிய நுண் ரோபோ கண்டுபிடிப்பு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

எதிர்காலத்தில் உடலுக்குள் சென்று புற்றுநோய் கட்டிகளை அழிக்கக்கூடிய நுண் ரோபோ ஒன்றை சுவிஸ் அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

பறவை வடிவம் கொண்ட அந்த நுண் இயந்திரம், பல்வேறு பணிகளை செய்து முடிக்க வல்லதாகும்.

எதிர்காலத்தில், அறுவை சிகிச்சைக்கு அது பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. Swiss federal institutes ETH Zurich மற்றும் Paul Scherrer Institute ஆகிய இறு நிறுவனங்களைச் சேர்ந்த அறிவியலாளர்கள் இதைக் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த ரோபோ, புரோகிராம் செய்யப்பட்ட nanomagnets என்னும் நுண் காந்தங்களால் ஆனது.

இந்த கண்டுபிடிப்பில் முக்கியத்துவம் வாய்ந்த அம்சம் என்னவென்றால், இந்த நுண்ரோபோக்கள் பல்வேறு இலக்குகளை செய்து முடிக்கவல்லவையாகும்.

அதாவது ஒரு கட்டளையை செய்ய சொல்லிவிட்டு, அதை முடித்ததும் உடனடியாக அடுத்த வேலையைக் கொடுத்தால் அதை செய்யும் வகையில் தன்னை மிகக் குறைந்த நேரத்தில் மாற்றிக்கொள்ளும் திறன் வாய்ந்தவையாகும்.

எனவே எதிர்காலத்தில், அவற்றை மனித உடலுக்குள், இரத்தக்குழாய்களுக்குள் அனுப்பி புற்றுநோய்க்கட்டிகளை அழிப்பது போன்ற செயல்களையும் அவை செய்து முடிக்கும் என்பதால் மருத்துவத்துறையில் மிகவும் பயனுள்ளவையாக விளங்கும்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்