சுவிட்சர்லாந்து வங்கிகளில் சுமார் 10 இந்தியர்களின் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்துக்கு யாரும் உரிமை கோராததால் அது அரசின் வசமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1995ம் ஆண்டிலிருந்து செயல்பாடற்ற நிலையில் இருக்கும் வங்கிக் கணக்கு விபரங்களை சுவிட்சர்லாந்து அரசு 2015ம் ஆண்டு வெளியிட்டது.
இதில் 10 இந்தியர்களின் கணக்குகள் ட்பட 2600 கணக்குகள் இடம்பெற்றிருந்தன, சுவிஸ் பிராங்க் மதிப்பின் படி 45 மில்லியன் ஆகும்.
இந்த பணத்துக்கு ரியவர்கள் ரிமை கோரலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது, எனினும் கடந்த 6 ஆண்டுகளில் இந்தியர்களின் கணக்குக்கு யாரும் ரிமை கோராததால் அரசு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
அந்நாட்டின் வங்கித் துறை தீா்ப்பாயத்திடம் உள்ள தகவல்களின்படி, கொல்கத்தாவைச் சோ்ந்த இருவா், டேராடூனைச் சோ்ந்த ஒருவா், மும்பையைச் சோ்ந்த இருவா் மற்றும் பிரான்ஸ், பிரிட்டனில் குடியேறிய சில இந்தியா்கள் தொடா்புடைய வங்கிக் கணக்குகள் செயல்பாடற்ற நிலையில் உள்ளன.
இதில், பணத்தை உரிமை கோருவதற்காக இரு இந்தியா்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட கெடு வரும் 15-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
மேலும் 3 பேருக்கு டிசம்பரில் கெடு முடிவடைகிறது. மீதமுள்ளவா்களுக்கு அடுத்த ஆண்டு டிசம்பா் வரை பணத்தை உரிமை கோரும் வாய்ப்பு உள்ளது.
குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் பணத்துக்கு உரிமை கோருவதற்கான ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும்;
அவ்வாறு செய்யாத பட்சத்தில் அந்த பணம் சுவிஸ் அரசின் வசம் மாற்றப்பட்டுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.