பிரித்தானிய சுற்றுலா அமைப்பாளரான Thomas Cook நிறுவனம் திவால் ஆனதன் தாக்கம், மோசமான வகையில் சுவிட்சர்லாந்தில் எதிரொலித்துள்ளது.
Pfäffikon நகரில் அமைந்துள்ள Thomas Cook நிறுவனத்தின் சுவிஸ் கிளை நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, சுவிட்சர்லாந்து தனது வரலாற்றில் சந்தித்த மிகப்பெரிய திவால்களில் ஒன்றாக அமையப்போகிறது என பிரபல பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுவரை, குறைந்த பட்சம் 5,150 பேர், கொடுத்த தொகையை திருப்பிக் கொடுக்கக் கோரி விண்ணப்பித்துள்ளதாக (creditors) Schwyz மாகாண ஃபெடரல் அலுவலகத்தின் திவால் அலுவலகத்தின் துணை இயக்குநனரான Adrian Gygax தெரிவித்துள்ளார். இன்னும் பலர், கொடுத்த தொகையை திருப்பிக் கொடுக்கக் கோரி முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Swissair நிறுவனம் திவாலானபோது 10,000 creditors தங்கள் பணத்தைத் திரும்பக் கொடுக்கக் கோரியது குறிப்பிடத்தக்கது.

Thomas Cook நிறுவனம் உலகின் மிகப்பெரிய சுற்றுலா அமைப்பாளர்களில் ஒன்றாகும், அதற்கு உலகம் முழுவதிலும் 30 நாடுகளில் கிளை அலுவலகங்கள் உள்ளன. செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி, பிரித்தானியாவின் Thomas Cook நிறுவனம் திவாலானதாக அறிவித்தது.
அதல் சுவிஸ் கிளையில் முதலீடு செய்திருந்தவர்களில் பெரும்பாலானோர் சுவிட்சர்லாந்து, ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாட்டவர்களும் அதில் அடங்குவர்.
மொத்தமாக எவ்வளவு தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டியுள்ளது என்பது குறித்து இதுவரை திவால் அலுவலகம் எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும், அது பல மில்லியன் ஃப்ராங்குகள் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
Very concerning time for Thomas Cook staff & customers. Biggest peacetime repatriation in UK history will now get people home. @foreignoffice staff in UK and overseas working non-stop with @UK_CAA and @transportgovuk to help. Anyone affected should visit https://t.co/byQNXCNyAm
— Dominic Raab (@DominicRaab) September 23, 2019