சுவிட்சர்லாந்தில் குற்றுயிராக மீட்கப்பட்ட அகதி: மனைவியுடன் கைதான வெளிநாட்டவர்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் அகதி ஒருவரை கொடூரமாக தாக்கிய விவகாரத்தில் தம்பதிக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

ரஷ்ய நாட்டவர்களான தம்பதி ஒன்று பெர்ன் மண்டலத்தில் குடியிருந்து வந்துள்ளது. இந்த நிலையில் அந்த ரஷ்ய நாட்டவர் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தங்கும் இல்லத்தில் பணியாற்றும் தமது மனைவி தம்மை வஞ்சிப்பதாக சந்தேகம் கொண்டுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு தமது மனைவி மற்றும் அவரது காதலரான மொரோக்கோ நாட்டவரையும் படுக்கையறையில் ஆடை ஏதுமின்றி ஒன்றாக பார்த்துள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த அந்த ரஷ்ய நாட்டவர், தமது மனைவியின் காதலரை கொடூரமாக தாக்கியுள்ளார்.

தரக்குறைவான வார்த்தைகளால் அசிங்கப்படுத்தியதுடன் அவரது விலா எலும்பு நொறுங்கும் மட்டும் கொடூரமாக சித்திரவதை செய்துள்ளார்.

சுமர் 5 மணி நேரம் கொடூரமாக அவரை தாக்கிய பின்னர், அந்த மொரோக்கோ நாட்டவரை விட்டே தரையில் காணப்பட்ட ரத்தம் முழுவதையும் சுத்தம் செய்ய வைத்துள்ளார்.

இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு சென்ற நிலையில், கடந்த திங்களன்று தாம் செய்தது குற்றந்தான் தண்டனை பெற தயாராக இருக்கிறேன் என அந்த ரஷ்ய நாட்டவர் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதி அந்த 48 வயது ரஷ்ய நாட்டவருக்கு 2 ஆண்டுகள் நிபந்தனையற்ற சிறை தண்டனையும்,

அவரது முன்னாள் மனைவி 44 வயது பெண்மணிக்கு 6 மாத நிபந்தனையற்ற சிறை தண்டனையுடன் மொத்தம் 36 மாத கால தண்டனை விதித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்