அந்த களங்கத்தை களைய ஆயிரம் முறை குளிக்கிறேன்: சுவிஸ் பெற்றோருக்கு மகளின் கண்ணீர் கடிதம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் டிசினோ மாகாணத்தில் குடியிருக்கும் தம்பதி ஒன்று தங்கள் பிள்ளைகளை துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கிய விவகாரம் தொடர்பில் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

டிசினோ மாகாணத்தின் பெலின்ஸோனா பகுதியில் குடியிருக்கும் இத்தாலிய தம்பதிகளே தங்களின் பிள்ளைகளை கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியவர்கள்.

சிறார்கள் என்ற பாரபட்சம் இன்றி மகள் மற்றும் மகனை படுக்கை அறையில் அந்த தம்பதி நெருக்கமாக இருக்கும் போது அனுமதித்து ரசித்துள்ளனர்.

மட்டுமின்றி கடந்த 2013 ஆம் ஆண்டு, தமது மகளுக்கு 14 வயது இருக்கும்போது அந்த 50 வயது தந்தை முதன்முறையாக வல்லுறவுக்கு அவரை உட்படுத்தியுள்ளார்.

மகளை மட்டுமல்ல மகனையும் அந்த தம்பதி துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியுள்ளனர். இந்த இருவருக்கும் நேர்ந்த துயரங்களை நீதிமன்றத்தில் வெளிப்படையாக கூறுவதற்கு மனம் இடம் தரவில்லை என அவர்கள் சார்பாக வாதிட்ட வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

தற்போது காப்பகம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள அந்த இளம்பெண், லுகானோ நீதிமன்றத்தில் தம்மால் முகம் காட்ட முடியாது எனக் கூறி, கடிதம் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், உங்களால் ஏற்பட்ட அந்த களங்கத்தை களைய நான் ஆயிரம் முறை குளிக்க வேண்டி இருக்கிறது.

உங்களால் நான் என்னை மிகவும் அருவருப்பாக பார்க்கிறேன். என்னிடம் ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள். உங்களின் மகள் என அறியப்பட இனி ஒருபோதும் நான் விரும்பவில்லை.

என அந்த கடித்தத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு இளைஞர்களுக்கான காப்பகத்தில் தஞ்சமடைந்த குறித்த இளம்பெண் தமது பெற்றோரால் ஏற்பட்ட துயரங்களை அம்பலப்படுத்தினார்.

இதனையடுத்தே அந்த இத்தாலிய தம்பதிகள் கைது செய்யப்பட்டனர் என உள்ளூர் இணைய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்