என்னை கருணைக்கொலை செய்துவிடுங்கள்: கதறும் 24 வயது இளைஞர்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள 24 வயது இளைஞர் ஒருவர், தன்னைக் கருணைக் கொலை செய்துவிடுமாறு கோரியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Winterthurஐச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டது.

யாருமின்றி தனியாக வசிக்கும் அந்த நபர், சக்கர நாற்காலியில் வலம் வருவதோடு, அவருக்கு கேட்கும் திறனும் இல்லை.

தான் வாழ விரும்பவில்லை என்றும், இரண்டு ஆண்டுகளாக தற்கொலை எண்ணம் மட்டுமே மேலோங்கி நிற்பதாகவும், ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.

சுவிட்சர்லாந்தில் கருணைக்கொலைக்கு உதவும் அமைப்பான Exitஇன் துணை தலைவரான Jürg Wiler, இப்படி ஒரு இளைஞர் கோரிக்கை விடுத்துள்ளது அபூர்வம் என்கிறார்.

தங்கள் அமைப்பின் 37 வருட வரலாற்றில், 40 வயதுக்கு குறைந்தவர்கள் தற்கொலை செய்துகொள்ள உதவியுள்ளது வெகு அபூர்வம் என்கிறார் அவர்.

தற்போது கருணைக்கொலை தொடர்பாக Exit உடன் பேச்சு வார்த்தை நடத்தி வரும் அந்த இளைஞர், இதுவரை இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை.

ஒருமுறை, தான் இளைஞன், ஒரு வேளை தான் குணமடைய வாய்ப்புள்ளது என்கிறார், மறுமுறை, நம்பிக்கை இழந்துவிட்டேன், இனி முன்னேற வாய்ப்பில்லை என்கிறார்.

Exitஐப் பொருத்தவரையில், அங்கு வரும் எல்லோரையுமே கருணைக்கொலை செய்ய ஏற்பாடு செய்வதில்லை அந்த அமைப்பு.

வாழ்வதைக்குறித்து பலமான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது அது. அங்கு தற்கொலை எண்ணத்துடன் வந்துள்ள பலர், தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டு, வாழும் ஆசையுடன் திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்