பொலிசாரிடம் சிக்கிய வெளிநாட்டு பெண்கள் 9 பேர்: சுவிட்சர்லாந்துக்குள் நுழைய தடை விதிப்பு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
319Shares

சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் மண்டலத்தில் சட்டவிரோதமாக பாலியல் தொழிலில் ஈடுபட்ட 9 வெளிநாட்டு பெண்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் நடவடிக்கைக்கு புலம்பெயர்ந்தோருக்கான அலுவலகம் ஆணை பிறப்பித்துள்ளது.

திங்களன்று இந்த விவகாரம் தொடர்பில் அரசு வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பணி அனுமதி பெறாமல் 9 வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்தில் உள்ள விடுதி ஒன்றில் பணியாற்றி வந்ததாகவும், இவர்கள் அனைவரும் பாலியல் தொழிலும் ஈடுபட்டு வந்துள்ளதும் தெரியவந்தது.

இதனையடுத்து Bernstrasse பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் லூசெர்ன் பொலிசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் இவர்கள் 9 பேரும் சிக்கியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைதானவர்கள் 20 முதல் 49 வயதுடைய பெண்கள் எனவும், இவர்கள் அல்பேனியா, பிரேசில் மற்றும் டொமினிகன் குடியரசு நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக சுவிட்சர்லாந்தில் இவர்கள் நுழைந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. மட்டுமின்றி உரிய ஆவணங்கள் ஏதுமின்றி இவர்கள் பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது.

கைதான இவர்களிடம் இருந்து கட்டுக்கட்டான தொகையும் கைப்பற்றியுள்ளதாக லூசெர்ன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது இவர்கள் 9 பேரையும் நாட்டைவிட்டு வெளியேற்றுவதுடன், சுவிட்சர்லாந்துக்குள் நுழைய தடை விதிக்கவும் புலம்பெயர்ந்தோருக்கான அலுவலகம் நடவடிக்கை முன்னெடுத்து வருகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்