படகில் ஏறுவதற்காக சக்கர நாற்காலியில் வந்தவருக்கு நேர்ந்த சோகம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் படகு ஒன்றில் ஏறுவதற்காக சக்கர நாற்காலியில் வந்த ஒருவர் தவறி ஆற்றுக்குள் விழுந்தார்.

நேற்று சுவிட்சர்லாந்தின் Rhine நதியில் படகு ஒன்றில் ஏறுவதற்காக சக்கர நாற்காலியில் வந்த ஒருவர் தவறி சக்கர நாற்காலியுடன் ஆற்றுக்குள் விழுந்தார்.

உடனடியாக மீட்புக்குழுவினர் பலர் அவரை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

பொலிசாரும் தீயணைப்பு வீரர்களும் அயராது மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, சிறிது நேரத்திற்குப்பின் அவர் தண்ணீரிலிருந்து எடுக்கப்பட்டார்.

முதல் உதவிக்குப்பின் சிறிது நேரம் அவர் உயிருடன் இருந்தாலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார் அவர்.

இன்னமும் பெயர் வெளியிடப்படாத அந்த நபர் விழுந்ததைக் கண்ட சாட்சியங்களை தேடி வரும் பொலிசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்