9 நாட்களாக காணாமல் போன சுவிஸ் முதியவர்: பின்னர் நடந்த விசித்திர சம்பவம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் குடியிருக்கும் டிமென்ஷியா பாதித்த முதியவர் ஒருவர் திடீரென்று மாயமாகி பாரிஸ் சென்று திரும்பிய சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாஸல் நகரில் குடியிருந்து வருபவர் 74 வயதான அடீப் முகமது. டிமென்ஷியா பாதித்த இவர் கடந்த 9 ஆம் திகதி ஜேர்மன் எல்லை நகரமான Lörrach-ல் இருந்து மாயமாகியுள்ளார்.

தவித்துப் போன குடும்பத்தினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த முதியவரின் பரிதாபமான நிலையை கருத்தில் கொண்டு பாஸல் நகர பொலிசார் விளம்பரம் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மட்டுமின்றி, அவரது குடும்ப உறுப்பினர்களும் தங்கள் வசதிக்கு ஏற்ப தீவிர தேடுதலில் களமிறங்கினர். பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் உதவி கோரியுள்ளனர்.

இந்த நிலையில், மாயமான அடீப் முகமது சுமார் 9 நாட்களுக்கு பின்னர், எந்த ஆபத்திலும் சிக்காமல் நவம்பர் 18 ஆம் திகதி குடியிருப்புக்கு திரும்பியுள்ளார்.

Picture: Private

ஆனால் அவர் திரும்பி வந்ததன் பின்னரே விசாரணை அதிகாரிகளுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. குறித்த நபர் இந்த 9 நாட்களில், கையில் பணமேதுமின்றி பாரிஸ் நகருக்கு சென்று வந்தது அம்பலமானது.

மட்டுமின்றி அவரிடம் பாரிஸ் சென்று வந்ததற்கான பயண ரசீதும் இருந்துள்ளது. மேலும், அவரிடம் Strasbourg-ல் இருந்து பாஸல் வரை பயணித்ததற்கான ரயில் பயணச்சீட்டும் இருந்துள்ளது.

கையில் பணம் ஏதுமின்றி இது சாத்தியமில்லை என கூறும் பொலிசார், குறித்த நபருக்கு எவரேனும் உண்மையில் உதவியிருக்க கூடும் என தெரிவித்துள்ளனர்.

ஆனால் அந்த முதியவருக்கு குறிப்பிட்ட 9 நாட்களில் என்ன நடந்தது என்ற தகவல் ஏதும் நினைவில் இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்