பாலத்திலிருந்து ஆற்றில் குதித்த நபர்: சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட பரிதாப சம்பவம் நடந்தேறியது.

நேற்று Zuchwil நகரிலுள்ள ஒரு பாலத்திலிருந்து ஒருவர் ஆற்றில் குதித்ததாக பொலிசாருக்கு செய்தி கிடைத்தது.

Aare ஆற்றில், இரண்டு படகுகள் மற்றும் ஒரு ஹெலிகொப்டர் உதவியுடன் பொலிசார் அவரை தேடும் பணியில் இறங்கினர்.

ஆனால் இரண்டு மணி நேரத்திற்கு பிறகே, அதுவும் உயிரற்ற நிலையில் அவரது உடல் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் பங்கிருப்பதாக தெரியவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர் யார் என்பதை கண்டறியும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்