என் கணவர் இறப்பதை நான் எப்போதுமே விரும்பியதில்லை: கருணைக்கொலை செய்யப்பட்ட பிரித்தானியரின் மனைவி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
304Shares

அரிய நோயால் பாதிக்கப்பட்டு சுவிட்சர்லாந்தில் கருணைக்கொலை செய்யப்பட்ட பிரித்தானியர் ஒருவரின் மனைவி, தான் ஒருபோதும் தன் கணவர் உயிரிழப்பதை விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Motor Neurone Disease என்ற அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட Richard Selley (65) சாப்பிடவோ நடக்கவோ முடியாமல் இயந்திரம் ஒன்றின் உதவியால்தான் பேசிவந்தார். எனவே சுவிட்சர்லாந்திலுள்ள கருணைக்கொலை மையத்தில் உயிரை விடுவது என முடிவு செய்தார் அவர்.

செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி அவரது ஆசையை நிறைவேற்றிய அவரது மனைவியான Elaine (57), தன் கணவர் உயிர் விடுவதை தான் ஒருபோதும் விரும்பியதில்லை என்றாலும், அவரது விருப்பத்தை தான் 100 சதவிகிதம் ஆதரித்ததாக தெரிவித்துள்ளார்.

தனது அஸ்தி கிரீஸிலுள்ள Kefaloniaவில் தூவப்படவேண்டும் என்ற கணவரின் ஆசை வரை ஒன்று விடாமல் நிறைவேற்றியுள்ள Elaine, அதிகாலையில் தூக்கத்திலிருந்து எழுவது முதல், தன்னை ஆக்டிவாக வைத்துக்கொள்வதற்கான அனைத்து காரியங்களையும் செய்கிறார்.

தான் தன் கணவருக்கு வாக்களித்தபடி, கருணைக்கொலை பிரித்தானியாவில் சட்டப்பூர்வமாக்கப்படவேண்டும் என்பதற்காக குரல் கொடுக்கும் அமைப்பு ஒன்றிற்காக பிரசாரம் செய்துவருகிறார் Elaine.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்