பெண்களை மட்டும் குறிவைத்த விசித்திர திருடன்: சுவிஸ் இளம்பெண் வெளியிட்ட பகீர் தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் பெண்களை மட்டுமே குறிவைத்து கொள்ளையிட்டு வந்த விசித்திர திருடனை நீண்ட போராட்டத்திற்கு பின்னர் பொலிசார் கைது செய்துள்ளனர்.

பெர்ன் மண்டலத்தின் Thun மாவட்ட பொலிசாரிடம் கடந்த 2015 ஆகஸ்டு முதல் 2016 நவம்பர் வரையான காலகட்டத்தில் விசித்திரமான வழக்குகள் பதிவானது.

அதில் மர்ம நபர் ஒருவர் தங்களை வழிப்பறி அல்லது ஏமாற்றி கொள்ளையிட்டு சென்றதாக 20 பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

இரவு நேரத்தில் மட்டும் முன்னெடுக்கப்பட்ட இந்த கொள்ளை சம்பவமானது நீண்ட பல மாதங்களாக துப்புத் துலங்காமல் இருந்து வந்தது.

மட்டுமின்றி, பெண்களை அந்த திருடன் காயப்படுத்தவோ, துஸ்பிரயோகம் செய்யவோ முயலவில்லை எனவும் பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.

ஆனால், 2018 ஆம் ஆண்டு குறித்த விசித்திர திருடன் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் துஸ்பிரயோக புகார் ஒன்றை அளித்துள்ளார்.

Thun மாவட்டத்தில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் இருந்து இருவரும் குடியிருப்புக்கு திரும்பியதாகவும், பாதி வழியே தம்மை கட்டாயப்படுத்தி உறவுக்கு தூண்டியதாகவும், ஆனால் கடுமையாக போராடி அவரிடம் இருந்து தப்பியதாகவும் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், நீண்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், குறித்த விசித்திர திருடனை பொலிசார் கைது செய்து, இன்று நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

33 வயதான அந்த நபர் இன்று மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். குறித்த நபர் மீது பாலியல் துஸ்பிரயோகத்திற்கு முயலுதல், திருட்டு உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

அரசு தரப்பில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை கோரப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்