சுவிஸில் மருத்துவர் ஒருவரிடம் சிக்கி சீரழிந்த 19 இளம்பெண்கள்: அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் தம்மிடம் சிக்கிச்சை தேடி வந்த 19 இளம்பெண்களை சீரழித்த மருத்துவர் ஒருவர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளார்.

சுவிட்சர்லாந்தின் வோட் மண்டலத்தில் குடியிருக்கும் 65 வயதான மருத்துவரே பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்ட இவர் தொடர்பில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

Healer என தம்மை அறிமுகம் செய்துகொண்டுள்ள இவரை நாடி பல நோயாளிகளும் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர்.

தம்மை நாடிவரும் நோயாளிகளுக்கு இவர் உளவியல் ஆலோசனைகளும் வழங்கி வந்துள்ளார். இந்த நிலையிலேயே இவர் மீது 19 பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் தாம் ஒன்றும் காமுகனல்ல என வாதிட்டுள்ள அவர், பிரான்ஸில் இருந்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் சுவிஸில் குடியேறியவராவார்.

Picture: Andreypopov

இவர் மீது சுமத்தப்பட்டுள்ள புகார் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என அவரது மனைவியும் பரிந்து பேசியுள்ளார்.

தம்மிடம் சிகிச்சை நாடி வரும் பெண்களை ஒழுக்கமற்ற முறையில் தொடுவதை அவர் வாடிக்கையாக வைத்துக் கொண்டுள்ளார்.

இவரது இந்த நவடடிக்கை தொடர்பில் இரு பெண்கள் ஒரே புகாரை அளித்துள்ள நிலையிலேயே பொலிசார், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

சிலரிடம் பாலியல் உறவுக்கும் இவர் முயன்றதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் இவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

உளவியல் ஆலோசகர்கள் சிலர், குறித்த மருத்துவருக்கு விசித்திர நோய் இருப்பதாக கூறியுள்ளனர். இருப்பினும் அவரது நடவடிக்கையானது குற்ற விசாரணைக்கு உட்படுத்துவதில் தவறில்லை என தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு கைதானது முதல் குறித்த மருத்துவர் சிறையில் உள்ளார். மேலும், அவரை விடுவித்தால், பிரான்சில் உள்ள தமது 3 பிள்ளைகளிடம் இவர் தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதாக சுவிஸ் நீதிமன்றம் சந்தேகம் தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்