தூதரக ஊழியர் கடத்தப்பட்ட விவகாரத்தில் சிஐடி அதிகாரிகளுக்கு தொடர்பா? இலங்கை-சுவிஸ் தரப்பில் விளக்கம்

Report Print Basu in சுவிற்சர்லாந்து

இலங்கையில் உள்ளுர் தூதரக ஊழியர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் பல தவறான தகவல்கள் பரவி வரும் நிலையில் சுவிஸ் தூதரகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் தூதரகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த நவம்பர் 25ம் திகதி கொழும்பில் உள்ள சுவிஸ் தூரகத்தில் பணியாற்றும் உள்ளுர் ஊழியர் சம்மந்தப்பட்ட தீவிர பாதுகாப்பு சம்பவம் இடம்பெற்றது.

ஊழியர் வலுக்கட்டயமாக காரில் கடத்தப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத மர்ம நபர், தூதரக தொடர்பான தகவல்களை அளிக்கும் படி ஊழியரை கட்டாயப்படுத்தியுள்ளார்.

இச்சம்வம் தொடர்பில் பல தவறான செய்திகள் பரவி வருகிறது. இது தொடர்பில் சுவிஸ் தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.

அதில், சம்பவம் தொடர்பில் சுவிஸ் தூதரகம் வழக்கு பதிவு செய்துள்ளது மற்றும் பொலிஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க இலங்கை அதிகாரிகளுடன் முழுமையாக செயல்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்டவர் மற்றும் அவர்களது உறவினர்களின் உடல்நிலையை முறையாகக் கருத்தில் கொண்டு, வழக்கு தொடர்பாக விசாரணையைத் தொடங்கவும் அறிவுறுத்தியுள்ளது.

மோசமான உடல்நிலை காரணமாக, பாதிக்கப்பட்டவர் தற்போது சாட்சியமளிக்கும் நிலையில் இல்லை என்று சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், சுவிஸில் குடிபெயர்ந்ததாக கூறப்படும் இலங்கை குற்றவியல் புலனாய்வுத் துறையின் அதிகாரியையும் அவரது குடும்பத்தினரையும் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சுவிஸ் அரசு நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. அத்தகைய கோரிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என சுவிஸ் தூதரகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

twitter

அதேசமயம், சுவிஸ் தூதரகம் வழங்கிய தகவல்களின்படி, சுவிஸ் தூதரகத்தின் அதிகாரி ஒருவர் கடத்தப்படுவது குறித்து அவர்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக இலங்கை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில், சிசிடிவி விசாரணை சிஐடி அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். கமெரா பிரிவின் உதவியும் பெறப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

கடத்தல்காரர்கள் தங்களை சிஐடி அதிகாரிகள் என்று அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது புலனாய்வாளர்களை தவறாக வழிநடத்தும் பொய்யான தகவல். சந்தேக நபர்களை கைது செய்ய விரிவான விசாரணை நடந்து வருவதாக இலங்கை பொலிஸ் தலைமையகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்